ஓமலுார்: -அ.தி.மு.க., சார்பில் நாளை பொங்கல் விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடக்க உள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலர், எம்.எல்.ஏ., மணி அறிக்கை:அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் ஓமலுார் சட்டசபை தொகுதி, திண்டமங்கலம், பனங்காட்டூர் மாரியம்மன் கோவில் திடலில் ஜன., 15ல்(நாளை) அ.தி.மு.க., சார்பில் பொங்கல் விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது.இதில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பொங்கல் விழாவை தொடங்கி வைத்து, விவசாயிகள், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். ஓமலுார் தொகுதி எம்.எல்.ஏ., மணி வரவேற்பார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகிப்பார். இதில் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள், இன்னாள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, பேரூர் செயலர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகள், சார்பு அணி, மகளிர் அணி நிர்வாகிகள், விவசாயிகள், மக்கள் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.