உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு கந்தம்பட்டியில் போக்குவரத்து துண்டிப்புக்கு காரணம் என்ன?

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு கந்தம்பட்டியில் போக்குவரத்து துண்டிப்புக்கு காரணம் என்ன?

சேலம்: சேலத்தில், திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்த வெள்ளநீர், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட கந்தம்-பட்டி பகுதி அணுகுசாலையின் இருபுறமும், 3 அடி உயரத்துக்கு தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதற்கு கந்தம்பட்டி - சித்தர்கோவில் சந்திப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், முறை-யான திட்டமிடல் இன்றி கட்டியது தான் காரணம் என குற்றச்-சாட்டு எழுந்துள்ளது. கடந்த, 2ம் தேதி இரவு, சேலம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால், ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஆர்ப்ப-ரித்தது. சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்-கப்பட்டதோடு, ஏராளமான வீடுகளை, மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். மழை நீர் தேங்கியதால் கந்தப்பட்டி பகுதி தேசிய நெடுஞ்சா-லையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். அளவுக்கதிகமாக தண்ணீர் தேங்கியதற்கு காரணம் முறையாக திட்டமிடல் இல்லாமல் மேம்பாலம் கட்டி-யது தான் காரணம் என தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கந்தம்பட்டியில், 4 வழிப்பாதை அமைத்தபோது, திருமணிமுத்தாற்றின் குறுக்கே, 'டெக் ஸ்லாப்' வடிவில் பாலம் அமைத்தது. மழை காலங்களில் அதிக வெள்ளம் வந்தாலும் அவை முறையாக செல்லும்படி, நீர்வழிப்பாதையின் நீளம், அகலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2018ல் திருமணி-முத்தாற்றின் குறுக்கே, கந்தம்பட்டி - சித்தர்கோவில் சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இதை, தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைத்துறை, மத்திய தரைவழி போக்குவரத்து துறை-யிடம் நிதியுதவி பெற்று, உயர்மட்ட பாலம் அமைத்தது. திருமணிமுத்தாற்றின் மீது ஏற்கனவே இருந்த பாலத்தை விட, அளவு பெரிதாக்கி புது பாலம் கட்டியிருக்க வேண்டும். ஆனால், 'டி - பீம்' வடிவில், பழைய பாலத்தின் மட்டத்தில் இருந்து, 2 மீ.,க்கு உயரம் குறைத்து புது பாலம் கட்டப்பட்டது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டியது போல, 'டெக் ஸ்லாப்' வடிவில் பாலத்தை கட்டியிருந்தால் பிரச்னை இல்லை. மாறாக, டி - பீம் வடிவில் கட்டப்பட்டதால் பாலத்தின் அடியில் செல்லும் நீரின் அடர்த்தி அளவு குறைந்துவிட்டது.குறிப்பாக பாலம் அமைந்துள்ள பகுதி சேறு, சகதி என்பதால் கட்-டுமான வசதிக்கு அங்கு தற்காலிக கான்கிரீட் தளம் அமைக்கப்-பட்டது. பாலம் கட்டி முடித்தபின், கான்கிரீட் தளமும் அகற்றப்ப-டவில்லை. இதனால் உயர்மட்ட பாலத்தின் வழியே, திருமணி-முத்தாற்றின் தண்ணீர் உள்ளே புகும் இடம், வெளியேறும் இடம், குறுகலாக உள்ளது. அதற்கு இடைப்பட்ட பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டிய நீர்வழிப்பாதை பெரிதாக இருந்தும், தண்ணீர் வேகம் தடைபட்டு, பாலத்துக்கு மேல், 2 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி, போக்குவரத்து தடை ஏற்-பட காரணமாகிவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இனி வரும் காலங்களில் இது போன்ற நிலமை ஏற்படாமலிருக்க, தற்போதே பராமரிப்பு பணிகளை துவக்க வேண்டும் என அப்பகு-தியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை