மேலும் செய்திகள்
சாலை தடுப்பில் மோதி பொக்லைன் டிரைவர் பலி
14-Apr-2025
40 சவரன் ரூ.3 லட்சம் கொள்ளை
16-Apr-2025
தாரமங்கலம்: சேலம், வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரின் மனைவி மலர், 45; இருவரும் 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் தாரமங்கலத்துக்கு, கடந்த 15ம் தேதி மதியம் சென்றனர். அணைமேட்டில் பைக் நிலை தடுமாறியதில், இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் மலரின் பின்தலையில் அடிபட்டது. முருகேசன் லேசான காயத்துடன் தப்பினார். அப்பகுதி மக்கள் மலரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி பலி
காடையாம்பட்டி, ஜோடுகுளியை சேர்ந்த, கட்டட தொழிலாளி பெருமாள், 48. இவருக்கு மனைவி, இரு மகன்கள், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் பெருமாள் வேலை செய்து விட்டு சக பணியாளர் சாமியப்பன், 38, என்பவருடன், 'ஹீரோ' பைக்கில் காமலாபுரத்தில் இருந்து ஜோடுகுளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு, 7:30 மணிக்கு, பைக் பின்புறம், கன்டெய்னர் லாரி மோதியது. இதில் பைக் ஓட்டிய பெருமாள் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். சாமியப்பன் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Apr-2025
16-Apr-2025