மனைவிக்கு தொந்தரவு வங்கி ஊழியருக்கு காப்பு
மல்லுார், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் யுவராஜா, 40. தனியார் வங்கி ஊழியர். அவரது மனைவி ஜெயலட்சுமி, 37. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 'டார்ச்சர்' செய்வதாக, ஜெயலட்சுமி மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில், யுவராஜாவை, நேற்று போலீசார் கைது செய்தனர்.