உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  அறை முன் மாந்திரீக பூஜை; பள்ளி தலைமை ஆசிரியர் பீதி

 அறை முன் மாந்திரீக பூஜை; பள்ளி தலைமை ஆசிரியர் பீதி

ஓமலுார்: சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், வார விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளியை திறக்க சென்ற போது, தலைமை ஆசிரியர் அறை முன், கரித்துாளில் வட்டமாக கோலமிட்டு, அதன் நடுவே ஒரு சிறிய பொம்மை போல் செய்து, அதன் அருகே முட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவை சிதறி கிடந்தன. மேலும், தலைமை ஆசிரியர் கதவில் பூ மாலையும் மாட்டியிருந்தது. அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் ஜான்போஸ்கோ கென்னடி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மர்ம நபர்கள் செய்த மாந்திரீக வேலை குறித்து, ஓமலுார் போலீசாரிடம், தலைமையாசிரியர் நேற்று புகார் தெரிவித்தார். போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பின்னர், பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை