உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விதவை உதவித்தொகைக்காக பெண் தீக்குளிக்க முயற்சி

விதவை உதவித்தொகைக்காக பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம்: மேட்டூர் அருகே, வனவாசி அண்ணாநகரை சேர்ந்தவர் மகாலட்-சுமி, 45. கணவனை இழந்த இவர், நேற்று, கலெக்டர் அலுவல-கத்தில் மனு கொடுக்க வந்தார்.அப்போது, தன்னிடம் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக்-கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை மீட்டனர்.அதன்பின் மகாலட்சுமி கூறுகையில்,'' சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டதால், விதவை உதவித்தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பித்தேன். இது-வரை எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. ஆதரவின்றி பரி-தவித்து வரும் எனக்கு, வாழ வழியின்றி, தற்கொலை முடிவுக்கு வந்து தீக்குளிக்க முயன்றேன்,'' என்றார். அதன்பின் அவர், கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்தார். அவரிடம், சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை