| ADDED : நவ 19, 2025 03:40 AM
சேலம் சேலம், அன்னதானப்பட்டி, 9ம் பாலியை சேர்ந்தவர் சுந்தரி, 40. இவர், மகன் மனோரஞ்சன், 20, உள்ளிட்ட உறவினர்களுடன் நேற்று, கழுத்தில் துாக்கு கயிற்றை சுற்றியபடி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அளித்த புகார் மனு:கடந்த, 25 ஆண்டுக்கு முன், மாற்று சமூகத்தினரை சேர்ந்த வெற்றிவேலை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். மகன் உள்ளார். 20 ஆண்டுக்கு முன், வெற்றிவேல், மற்றொரு பெண்ணை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் ஒரு மகன் உள்ளார். 2021ல் வெற்றிவேல் இறந்துவிட்டார். கணவரின் சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.இந்நிலையில் என் மகனை கொலை செய்ய, கணவரின் இரண்டாவது மனைவி, கணவரின் தம்பிகள், கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளனர். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தும் பலனில்லை. அதிகாரிகள், என் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இங்கேயே தற்கொலை செய்து கொள்ள நினைத்து, துாக்கு கயிறுடன் வந்தேன்.