உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறுந்து கிடந்த ஒயர்; மிதித்த பெண் உயிரிழப்பு

அறுந்து கிடந்த ஒயர்; மிதித்த பெண் உயிரிழப்பு

ஓமலுார்: ஓமலுார் அருகே பெரியேரிப்பட்டி காலனியை சேர்ந்தவர் செல்வி, 42. ஊராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளராக இருந்தார். இவரது கணவர் அழகேசன் இறந்த நிலையில், இரு மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று காலை, அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின்கம்பத்திலிருந்து அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் பலியானார். அங்கு தொளசம்பட்டி மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை