உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாதையில் பைக் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி

மலைப்பாதையில் பைக் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி

ஏற்காடு, ஏற்காடு, பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கதிரவன், 24, இவரது நண்பர் நந்தகுமார், 22. இருவரும் இளம்பிள்ளையில் துணிக்கடையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று காலை, பல்சர் பைக்கில் தொழில் சம்பந்தமாக ஏற்காடு வந்து விட்டு மதியம் 2:00 மணிக்கு சேலம் திரும்பினர். பைக்கை நந்தகுமார் ஓட்டினார். எதிரே சேலத்தில் இருந்து வீரபாண்டி மேட்டுக்காட்டை சேர்ந்த மெய்யழகன், 35, என்பவர் மினி டிப்பர் லாரியில் கட்டடம் கட்டும் சிமென்ட் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஏற்காடு நோக்கி வந்துள்ளார். ஏற்காடு மலைப்பாதையில் போலீஸ் சோதனைச்சாவடிக்கு முன், 2 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு வளைவில் பைக் செல்லும் போது, எதிரே மெய்யழகன் ஓட்டி மினி லாரி மோதியது. அப்போது பைக் லாரி பின் சக்கரத்தில் மோதியதால், பின்னால் அமர்ந்து வந்த கதிரவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயமடைந்த கதிரவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். நந்தகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி