உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 51 பயனாளிக்கு ரூ.1.18 கோடி நலத்திட்டம் 

51 பயனாளிக்கு ரூ.1.18 கோடி நலத்திட்டம் 

தேவகோட்டை: தேவகோட்டை வட்டாரத்தில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் மூலம் பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.முகாமில் 139 மனுக்கள் பெறப்பட்டதில், 45 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இம்முகாம் மூலம் 488 பேரிடம் கலெக்டர் நேரடியாக மனுக்களை பெற்றுள்ளார். முகாமில் 51 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன், தாசில்தார் சேதுநம்பு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி