உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் 18 பேர் குண்டாசில் கைது

மாவட்டத்தில் 18 பேர் குண்டாசில் கைது

சிவகங்கை,: மாவட்டத்தில் 2 மாதங்களில் மட்டுமே 18 பேர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் உத்தரவில் எஸ்.ஐ., தலைமையில் போலீஸ் குழு அமைத்து குண்டர் தடுப்பு சட்டம் சார்ந்த ஆவணங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த (2024) ஆண்டு சட்டம் ஒழுங்கு, பாலியல், திருட்டு, போதை பொருள் விற்பனை வழக்கில் ஈடுபட்டதாக 51 பேர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே போதை பொருள் விற்பனை வழக்கில் ஒருவர், கொலை முயற்சி வழக்கில் 8, போக்சோ வழக்கில் 5, திருட்டு வழக்கில் 4 பேர் என 18 பேர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை