கிராவல் மண் திருட்டு டிரைவர் உட்பட 2 பேர் கைது
சிவகங்கை : நாட்டரசன்கோட்டையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி வினோத்குமார் நாட்டரசன்கோட்டை மயான பகுதியை ஆய்வு செய்தார். இயந்திரத்தின் மூலம் டிப்பர் லாரியில் கிராவல் மண் அள்ளுவதை உறுதி செய்த அவர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் டிப்பர் லாரி டிரைவர் நாட்டரசன்கோட்டை சஞ்சீவீகுமார் 31, செய்களத்துார் இயந்திர டிரைவர் ராஜேஷ்கண்ணன் 25, டிப்பர் லாரி உரிமையாளர் ராமசாமி 28, இயந்திர உரிமையாளர் ராஜபிரபு 35 மீது வழக்கு பதிவு செய்து சஞ்சீவீகுமார், ராஜேஷ்கண்ணனை கைது செய்து லாரியையும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.