உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 30,744 பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 30,744 பேர் எழுதினர்

சிவகங்கை : மாவட்ட அளவில் 144 தேர்வு மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வினை 30,744 பேர் எழுதினர். நேற்றைய தேர்வில் 8,499 பேர் பங்கேற்கவில்லை. மாநில அளவில் வி.ஏ.ஓ., வனக்காவலர் உட்பட 6,424 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நேற்று இம்மாவட்டத்தில் உள்ள 144 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், பங்கேற்க 39,242 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த தேர்வில், 30,744 பேர் பங்கேற்றனர். தேர்வில் 8,499 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 140 முதன்மை கண்காணிப்பாளர், பறக்கும் படையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி