உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டயர் வெடித்து கால்வாயில் சிக்கிய அரசு பஸ்

டயர் வெடித்து கால்வாயில் சிக்கிய அரசு பஸ்

திருப்புவனம் : திருப்புவனத்தில் அரசு பஸ்சின் முன்பக்க டயர் வெடித்ததில் விபத்திற்குள்ளான பஸ் மழை நீர் கால்வாயில் சிக்கி கொண்டது.மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு திருப்புவனம் வழியாக அரசு டவுன் பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. நேற்று காலை 10:00 மணிக்கு மதுரையில் இருந்து மேலசொரிகுளம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சை டிரைவர் திருப்பதி ஓட்டி வந்தார், நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில் வரும் போது முன்பக்க வலது புற டயர் வெடித்ததில் நிலை தடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி சென்டர் மீடியனில் அமைக்கப்பட்டிருந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் சிக்கி நின்றது.இந்த விபத்தில் கண்டக்டர் பாண்டி உள்பட மூன்று பயணிகள் காயமடைந்து முதல் உதவி சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு சென்றனர். பஸ் விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். திருப்புவனம் கிளை பணிமனை மூலம் இயக்கப்படும் 44 அரசு டவுன் பஸ்களும் போதிய பராமரிப்பின்றியே இயக்கப்படுகின்றன. பல டவுன் பஸ்களில் டயர்கள் அனைத்தும் தேய்ந்து போய் டியூப்கள் வெளியே தெரியும் அளவிற்கு உள்ளன. 108 டிகிரி வெயில் கொளுத்தும் போது டயர்கள் அதனை தாங்காமல் வெடித்து விபத்திற்குள்ளாகின்றன. நேற்று விபத்திற்குள்ளான பேருந்து காலை நேரத்தில் வெடித்துள்ளது. பயணிகள் உயிருடன் போக்குவரத்து கழகங்கள் விளையாடி வருகின்றன. பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன் டவுன் பஸ்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை