உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் காட்சிப்பொருளான இயந்திரம்

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் காட்சிப்பொருளான இயந்திரம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும்கலெக்டர் அலுவலகம், மற்றும் முக்கிய கோயில்களில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் செயல்படுகிறது. இந்த இயந்திரத்தில் ரூ.10 மதிப்புள்ள நாணையங்களை செலுத்தினால் மஞ்சள் பை வரும். கடைகளுக்கு செல்வோர் இந்த பைகளை பயன்படுத்தி பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்காமல்காட்சி பொருளாக உள்ளது. இந்த இயந்திரம் இயங்க மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை