உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் அருகே ஆ.தெக்கூரில்ஸ்மார்ட் கிராமம் அமைக்க திட்டம்  

திருப்புத்துார் அருகே ஆ.தெக்கூரில்ஸ்மார்ட் கிராமம் அமைக்க திட்டம்  

சிவகங்கை, : திருப்புத்துார் அருகே ஆ.தெக்கூரில் பழங்குடியின நரிக்குறவர்களுக்கு 69 வீடுகளுடன் கூடிய 'ஸ்மார்ட் கிராமம்' ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.திருப்புத்துார் அருகே ஆ.தெக்கூரில் வசிக்கும் பழங்குடியின நரிக்குறவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் புதிய வீடுகள் கட்டிக்கொடுத்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கிராமத்தை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஆ.தெக்கூரில் வசிக்கும் 69 குடும்பத்திற்கு தலா 2.5 சென்ட் நிலத்தில் தனி தனி வீடுகள்,கட்டித்தரப்பட உள்ளன. இது தவிர இந்த குடியிருப்பில் வீடுகள்தோறும் மின், மேல்நிலை தொட்டி அமைத்து குடிநீர் வசதி, ரோடு, அங்கன்வாடி, சமுதாயக்கூடம் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய 'ஸ்மார்ட் கிராமம்' ஏற்படுத்த திட்டமிட்டுஉள்ளனர்.

அரசு ஒப்புதலுக்காக காத்திருப்பு

இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரிகூறியதாவது: பழங்குடியின நரிக்குறவர்கள் கோரிக்கையை ஏற்று, ஆ.தெக்கூரில் 'ஸ்மார்ட் கிராமம்' ஏற்படுத்தும் திட்ட அறிக்கையை அரசின் ஒப்பதலுக்கு அனுப்பியுள்ளோம். அரசு ஒப்புதல் கிடைத்தததும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் மூலம் 69 வீடுகள், குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை