உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிப்படை வசதியில்லாத கிராமம்

அடிப்படை வசதியில்லாத கிராமம்

சிவகங்கை; காளையார்கோவில் அருகே மேலமருங்கூர் ஊராட்சிக்குட்பட்ட காவனிக்கரை கிராமத்தில் அடிப்படை வசதி செய்துதரக்கோரி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையார்கோவில் ஒன்றியம் மேலமருங்கூர் ஊராட்சியில் உள்ளது காவனிக்கரை கிராமம். இந்த கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பளுவூரில் இருந்து செல்லக்கூடிய ரோடானது சேதம் அடைந்துள்ளது. ரோட்டின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் ரோட்டை மறைத்துள்ளது. டூவீலரில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் வர முடியாதநிலை உள்ளது. குடிநீர் வசதி கிடையாது. கிராமத்தில் உள்ள மேல்தேக்க நீர் தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஊராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.அய்யாக்கண்ணு கூறுகையில், எங்கள் கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. குடம் 15 ரூபாய்க்கு வாங்குகிறோம். கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்தேக்க தொட்டி முழுவதும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது.மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தை ஆய்வு செய்து மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ