உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெள்ளிக்குறிச்சி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிளக்கு பூஜை

வெள்ளிக்குறிச்சி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிளக்கு பூஜை

மானாமதுரை : வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் வள்ளி, தெய்வானையுடனான முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நல்ல மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் 751 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.நேற்று சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம்,குங்குமம், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடைபெற்ற 751 விளக்கு பூஜையை பாதயாத்திரை திருப்பணி குழு தலைவர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இதில் வெள்ளிக்குறிச்சி, சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்