உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆ.தெக்கூர் சிவன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை

ஆ.தெக்கூர் சிவன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை

நெற்குப்பை : திருப்புத்தூர் ஒன்றியம் ஆ.தெக்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை நடந்தது. காலையில் மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் அலங்காரத்தில் உற்ஸவர் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை துவங்கியது.சிவாச்சார்யர்கள் சங்கல்பம் செய்து, 108 திருவிளக்கு போற்றி மந்திரங்கள், 1008 நாமாவளி அர்ச்சனைகள், 108 தமிழ் அர்ச்சனை மந்திரங்கள் கூறி திருவிளக்கு பூஜையை வழி நடத்தினர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடி அகலவும், மாங்கல்ய பலம் வேண்டியும் பெண்கள் இந்த பூஜையை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ