| ADDED : ஏப் 10, 2024 05:52 AM
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஏப்., 19 ஓட்டுப்பதிவன்று வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து ஓட்டளிக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ஓட்டுப்பதிவன்று ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் தான் வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், உரிய ஆவணமாக போட்டோ ஒட்டிய ஆதார் கார்டு, நுாறு நாள் வேலை திட்ட அட்டை, வங்கி, தபால் சேமிப்பு கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட், பென்ஷனர் ஆவணம், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டைகளுடன் வந்து ஓட்டளிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பெயர், பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விடுதலின்றி தங்களது ஓட்டினை பதிவு செய்ய வேண்டும், என்றார்.