உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குன்றக்குடியில் கொட்டகையில் பற்றிய தீயில் யானை காயம்

குன்றக்குடியில் கொட்டகையில் பற்றிய தீயில் யானை காயம்

காரைக்குடி, :சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் யானைக்காக அமைக்கப்பட்ட கொட்டகையில் பற்றிய தீயில் யானை சுப்புலட்சுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. கால்நடை டாக்டர்கள் அதற்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயிலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக யானை சுப்புலட்சுமி உள்ளது. கோயிலுக்குச் செல்லும் மலைபடிகளுக்கு அருகிலேயே யானைக்காக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கூரை தகர ஷீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு அதன் உட்பகுதியில் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.நேற்று அதிகாலை 12:30 மணிக்கு மின் கசிவால் கீற்று கொட்டகையில் தீப்பற்றியது. பாகன் இல்லாத நிலையில் தீயில் இருந்து தப்பிக்க கட்டி போடப்பட்டிருந்த யானை அதை அறுத்து கொண்டு தாமாகவே மண்டபத்திலிருந்து வெளியேறியது.கோயில் மண்டபத்தின் முன் தீக்காயத்துடன் யானை நிற்பதை கவனித்த பணியாளர்கள், மக்கள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். கால்நடை டாக்டர்கள் யானை சுப்புலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 13, 2024 17:13

நம்பும்படி இல்லை. ஏதோ சதிவேலை நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது எப்படி யானையின் பிளிறல் யாருக்கும் கேட்காமல் போனது? பாகன் எங்கே போனார்? சண்முகநாதனுக்கே வெளிச்சம்.


முக்கிய வீடியோ