| ADDED : ஜூலை 01, 2024 06:11 AM
எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எஸ்.புதுார் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் விஜயா குமரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜூ, சாந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வொன்றியத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர் இந்திராகாந்தி சத்தியமூர்த்தி தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.கவுன்சிலர் சின்னம்மாள் மென்னன் பேசும்போது, ஒன்றிய அலுவலகத்தில் பெண்களுக்கு தனிக் கழிப்பறை அமைக்க வலியுறுத்தினார். கூட்டத்தில் துணைத் தலைவர் வீரம்மாள், கவுன்சிலர்கள், ரேவதி, ராசாத்தி பங்கேற்றனர். ஓவர்சீயர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.