உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு; அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு; அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

திருப்புத்துார் :' திருப்புத்துாரில் நடந்த இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சிவகங்கை காங்.,வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், 'மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்' என்றார்.முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தி.மு.க., நகர் செயலர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேலு, மாணிக்கம் முன்னிலையில் பெரியகருப்பன் பேசியதாவது: கடந்த தேர்தலில் கார்த்தி எம்.பி., 3.3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இப்போது 4 லட்சம் வித்தியாசத்தில் வெல்வார்கள் என்று பலரும் பேசுகின்றனர். இருக்கும் ஒரு ஓட்டையும் முறையாக போட வேண்டும்.தேர்தல் களத்தில் 3 அணிகள் கூட்டணியுடன் உள்ளன. தனியாக பல கட்சிகளும் போட்டியிடுகின்றன. அதில் எடை போட்டு பாருங்கள். அந்த அணியில் 'யார் நல்ல அணி. யார் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்கள். எதிர்காலத்தில் நாட்டுமக்களைப் பாதுகாக்கக்கூடியவர்' என்ற நம்முடைய கருத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும். காங்., ஆட்சியின் போது நடந்த சாதனைகளையும், தி.மு.க., ஆட்சியின் சாதனைகளையும் கூற வேண்டும்.10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான . பா.ஜ. அரசு குறித்து பேச வேண்டும்.மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என்றவுடன் மறுபரிசீலனையில் இரண்டாம் கட்டமாக 9 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட மனுக்களில் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் பரிசீலித்து வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ