உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உயிர்ம வேளாண்மை கருத்தரங்கு 

உயிர்ம வேளாண்மை கருத்தரங்கு 

சிவகங்கை : அமராவதிபுதுார் கிராமிய பயிற்சி மையத்தில் உயிர்ம வேளாண்மை கருத்தரங்கு, கண்காட்சி நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமிபிரபா வரவேற்றார். கலெக்டர் பி.ஏ.,(வேளாண்மை) சுந்தரமகாலிங்கம், செட்டிநாடு வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பாபு உட்பட வேளாண்மை துணை, உதவி இயக்குனர்கள், அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். கலெக்டர் பேசியதாவது:மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகளவில் உள்ளன. நிலத்தின் தன்மைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சியும் மேம்படுத்தப்படுகிறது. இது தவிர ஆடு, மாடு, தேனீ வளர்ப்பிலும் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகின்றனர். விவசாயத்தில் பாரம்பரியம் நோக்கி திரும்பி வருகிறோம். இயற்கை விவசாயம் மூலமே தரமான காய்கறி கிடைக்கிறது. இங்கு நடைபெறும் செயல்விளக்க கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு, மேலும் விவசாயத்தை மேம்படுத்த பாடுபட வேண்டும். விழாவில் பாரம்பரியவேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 14 அங்கக வேளாண்மை குழுவிற்கு உயிர்ம வேளாண்மை சான்றுகள், மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6 விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி