உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரத்த தான விழிப்புணர்வு

ரத்த தான விழிப்புணர்வு

காரைக்குடி : காரைக்குடியில் உலக ரத்த தினத்தை முன்னிட்டு, காவல்துறை, அழகப்பா பல்கலை குளோபல் மிஷின் மருத்துவமனை, 6 எக்ஸ், காரைக்குடி சமூக ஆர்வலர்கள் சார்பில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நடந்தது. அழகப்பா பல்கலை துணை வேந்தர் க.ரவி, டி.எஸ்.பி., பிரகாஷ் தொடங்கி வைத்தனர். குளோபல் மிஷின் மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரேசன் ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சமூக ஆர்வலர் இஸ்மாயில் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் விவேகானந்தன், டாக்டர். ராமசுப்பு, திருஞானம், சித்ரா, பிரகாஷ் மணிமாறன் மற்றும் குருதிக் கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி