உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துருப்பிடித்த கம்பிகளுடன் பாலம் கைப்பிடி புதுப்பிப்பு

துருப்பிடித்த கம்பிகளுடன் பாலம் கைப்பிடி புதுப்பிப்பு

தேவகோட்டை : தேவகோட்டை மணிமுத்தாறு பாலத்தில் உள்ள கைப்பிடி சுவர் துருப்பிடித்த கம்பிகளுடன் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி- - - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை எல்லையில் மணிமுத்தாறு குறுக்கே பாலம் உள்ளது. பல ஆண்டாக இப்பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. பாலத்தின் நடுவே வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படும். இதனால் பாலத்தில் ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. காலப்போக்கில் பாலத்தின் இரு பக்கமும் உள்ள நடைபாதை தளம், பாலத்தின் தடுப்பு சுவர், கைப்பிடி போன்றவை முற்றிலும் சேதமடைந்து விட்டன.கைப்பிடி சுவர்களில் இருந்து சுவர்கள் இடிந்துவிழுந்து, துருப்பிடித்த கம்பிகளாக காட்சி அளிக்கின்றன. இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது.

தரமற்ற பணிகளால் அச்சம்

செய்தியின் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக பாலம் புனரமைப்ப பணி நடைபெற்று வருகிறது. இதிலும், தடுப்பு சுவரில் துருப்பிடித்த கம்பிகளை புதிதாக மாற்றி அமைக்காமல், அதன்மேல் சிமிண்ட் கலவையை பூசி வருகின்றனர். இதனால், மீண்டும் இந்த பாலத்தின் தடுப்பு சுவர்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பாலத்தின் தடுப்புசுவர்களை பூச மட்டும் தான் சொல்லியுள்ளனர். துருப்பிடித்த கம்பிகளை அகற்றி, புதிய கம்பிகளை பொருத்தி, சிமிண்ட் கலவை கொண்டு பூசுமாறு தெரிவிக்கவில்லை என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்று பாலத்தில் முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதை கலெக்டர் ஆஷா அஜித் உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி