மேலும் செய்திகள்
விபத்து நடந்த இடத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
1 hour(s) ago
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
1 hour(s) ago
கும்பாபிஷேகம்
23 hour(s) ago
மாட்டு வண்டி பந்தயம்
23 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை அருகே கொல்லங்குடியில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 44 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 12 ஜோடிகளும், இரு சுற்றுகளாக நடந்த சின்ன மாடு பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 7 கிலோ மீட்டர் துாரமும், சிறிய மாட்டுக்கு 5 கிலோமீட்டர் துாரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.முதல் 5 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.* சிவகங்கை அருகே கண்டுப்பட்டி பூர்வீக காளியம்மன் கோயிலில் ஆடி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி, சின்ன மாடு பிரிவில் 20 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 7 கி.மீ., சிறிய மாட்டுக்கு 6 கி.மீ., துார எல்லை நிர்ணயம் செய்திருந்தனர். இப்பந்தயத்தில் முதல் 5 இடங்களைபிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
1 hour(s) ago
1 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago