உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுார் வலசை எருதுகட்டு விழா தகராறில் 11 பேர் மீது வழக்கு

புதுார் வலசை எருதுகட்டு விழா தகராறில் 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி, : இளையான்குடி அருகே புதூர் வலசையில் நடந்த தின்னாருடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவிற்காக, நேற்று முன்தினம் எருதுகட்டு விழா நடந்தது.இதில், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இளையான்குடி எஸ்.ஐ., சேகர் புகாரின்படி, புதுார் வலசை கிராமத்தை சேர்ந்த சிவா, கஜேந்திரன், அஜித், புகழேந்தி, ஸ்ரீகாந்த், கண்ணன், சிவனேஷ், பிரவீன், அண்டக்குடியை சேர்ந்த மலைராஜ், செங்கோல், அசோக் ஆகிய 11 பேர் மீதும், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய ஏ.புதுார் தினகரன், அசோக் குமார், தனிக்கொடி, புதூர்வலசை செல்வம், ஹரிராமன் ஆகிய 5 பேர் மீதும் இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி