உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறுவட்ட விளையாட்டுப் போட்டி

குறுவட்ட விளையாட்டுப் போட்டி

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரியில், எல்.எப்.ஆர்.சி., பள்ளி தலைமையில் குறுவட்ட விளையாட்டுப் போட்டி நடந்தது. சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி, மாங்குடி எம்.எல்.ஏ., மேயர் முத்துத்துரை சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் ஆரோன், மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளி ராஜன், டி.எஸ்.பி., பிரகாஷ் பங்குத்தந்தை கிளமெண்ட் ராஜா, தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி