உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊராட்சிக்கு கூடுதல் நிதி கோரி ஆர்ப்பாட்டம்

ஊராட்சிக்கு கூடுதல் நிதி கோரி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: கிராம ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நகராட்சி, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கிராம ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.14,593, துாய்மை பணியாளருக்கு ரூ.12,593, துாய்மை காவலருக்கு ரூ.10,000 வீதம் சம்பளம் வழங்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., பொது செயலாளர் சேதுராமன், பொது செயலாளர் முருகானந்தம், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் உமாநாத், மாவட்ட துணை தலைவர் வேங்கையா, பொது செயலாளர் சையது முகம்மது, குடிநீர்வடிகால் வாரிய ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேவியர், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், அண்ணாத்துரை, வெள்ளைச்சாமி பங்கேற்றனர். கிராம ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். குடிநீர் தொட்டி ஆபரேட்டர், துாய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ