உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெருக்கடியாகக்கூடும் பொருட்களுக்கு தீர்வை இன்றே கண்டறிய வேண்டும் இயக்குனர் பேச்சு

நெருக்கடியாகக்கூடும் பொருட்களுக்கு தீர்வை இன்றே கண்டறிய வேண்டும் இயக்குனர் பேச்சு

காரைக்குடி, : காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது. மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குனர் ரமேஷா வரவேற்றார்.மூத்த முதன்மை விஞ்ஞானி பழனியப்பன் நன்றி கூறினார். இந்திய ரேர் எர்த் லிமிடெட் மும்பை தலைமை இயக்குனர் தீபேந்திர சிங் பேசுகையில்:பற்றாக்குறையான பொருட்கள், மதிப்பு கூட்டு தொழில் பெரும் அங்கம் வகிக்கின்றன . லித்தியம், காப்பர், அலுமினியம், கோபால்ட், நிக்கல் மற்றும் இதர மின்கல உலோகங்களின் 2030 மற்றும் 2040 எதிர்காலத் தேவைகள் அதிக அளவில் இருக்கும். எதிர் வரும் ஆண்டுகளில் நெருக்கடியாகக்கூடும் பொருட்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை இன்றே கண்டறிய துவங்க வேண்டும். அரிதான பொருட்களை தனிமைப்படுத்துதல் பிரித்தெடுத்தல் மற்றும் எப் எலக்ட்ரான் பற்றிய புரிதல் சவால் மிகுந்தவை. அரிதான பொருட்கள் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் துாய ஆற்றல் மாறுபாட்டுக்கான பொருட்களாக பெரும் பங்கு வகிக்கிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை