உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வட்டார மருத்துவ அலுவலர்கள் வாகனங்கள் இன்றி அவதி

வட்டார மருத்துவ அலுவலர்கள் வாகனங்கள் இன்றி அவதி

சிவகங்கை: தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் வட்டார மருத்துவ அலவலர்கள் கிராமங்களுக்கு செல்ல வாகனம் இல்லாமல் அவதிப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் 46 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 2177க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.2012 ஜூனில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள 142 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதியதாக பொலீரோ ஜீப்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். கிராமங்களுக்கு மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் சென்று வர இந்த வாகனம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வாகனங்களை சுகாதார பணிகள் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அதிகாரிகளே பயன்படுத்திகின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிலை நீடிக்கிறது.மருத்துவ அலுவலர்கள் கூறியதாவது: டாக்டர்கள் கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற வேண்டும். என அரசு கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவ அலுவலர்களுக்கு கிராமங்கள் சென்று வர வாகனங்கள் இல்லை.இதனால் பின்தங்கியுள்ள கிராமங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. கிராமப்புற மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்படுகிறது.பொது சுகாதாரத் துறையில் வாகன பற்றாக்குறையும், டிரைவர் பற்றாக்குறையும் உள்ளது. புதிய வாகனங்கள் வாங்கவும், புதிய டிரைவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைகளை தடுக்க முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ