மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
29 minutes ago
பயிற்சி முகாம்
29 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
30 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
30 minutes ago
சிலை பிரதிஷ்டை
31 minutes ago
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து இளையான்குடிக்கு வைகை குடிநீர் ரூ. 28.4கோடி செலவில் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 9600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் 3400க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்ட இணைப்புகள் மூலம் மாதந்தோறும் ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அடிக்கடி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்படும் பழுதால் இந்த தண்ணீரும் கிடைக்காமல் இளையான்குடி பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியிலிருந்து இளையான்குடிக்கு கொண்டு வரப்பட்ட வைகை கூட்டு குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென எம்.எல்.ஏ.,தமிழரசி கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28.4 கோடி செலவில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், கோபிநாத் கூறியதாவது: மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ரூ.14.2 கோடியும்,மாநில அரசு 8.41கோடியும், பேரூராட்சி நிதியாக 5.61 கோடியும் ஒதுக்கப்பட்டு தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்தத் திட்டத்தில் ஏற்கனவே இருந்த 3 உறை கிணறுகளோடு புதிதாக மேலும் 3 உறை கிணறுகளும் கட்டப்பட்டு இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி பரமக்குடியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். குடிநீர் இத்தொட்டிகளில் சேமிக்கப்பட்டு இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
29 minutes ago
29 minutes ago
30 minutes ago
30 minutes ago
31 minutes ago