உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேம்பால ரோட்டில் குடிநீர் திட்ட குழாய்

மேம்பால ரோட்டில் குடிநீர் திட்ட குழாய்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் போக்குவரத்திற்கு இடையூறாக கூட்டு குடிநீர் திட்ட குழாய் பொருத்தப்பட்டிருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.திருப்பாச்சேத்தி, மாரநாடு, ஆவரங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் வைகை ஆற்றை கடந்து தான் சிவகங்கை சென்று வருகின்றனர். இப்பகுதியில் விளையும் தேங்காய், வாழை இலைகள், வாழை மரங்கள் உள்ளிட்டவைகளை சிவகங்கை கொண்டு செல்ல உள்ள ஒரே ஒரு பாதை இது தான்.வைகை ஆற்றின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குறுகலான பாலத்தின்வழியே தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பாலத்தில் கனரக வாகனங்கள் எதிர் எதிரே வந்தால் கூட சற்று சிரமப்பட்டு தான் விலக முடியும்.தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாதையில் சென்று வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருப்பாச்சேத்தியில் இருந்து கானுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல கூட்டு குடிநீர் குழாய் பாலத்தின் பக்கவாட்டு பாதையில் பொருத்தப்பட்டது. வாகனப் போக்குவரத்திற்கு எந்த வித சிரமமும் இல்லை. காட்டுப்பகுதியில் பாலம் அமைந்திருப்பதால் இந்த பாலத்தின் நடை பாதையை யாரும் பயன்படுத்துவதும் கிடையாது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே அதிகாரிகள் நடைபாதையில் பொருத்தப்பட்டதை அகற்றி பாலத்தின்ஓரத்தில் பொருத்தி விட்டனர். அதிலும் பாலத்தின் பாதி துாரம் வரை பொருத்தியதுடன் பணிகளை நிறுத்தி விட்டனர். தினசரி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாலத்திலேயே கூட்டு குடிநீர் குழாய் பொருத்தப்பட்டதால் ஒன்றரை அடி அகலப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறுகலான பாலத்தில் குழாயும் பதிக்கப்பட்டதால் மேலும் குறுகலாக மாறி விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் கூட்டு குடிநீர் குழாயை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நடைபாதையில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை