உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம்

போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம்

திருப்புத்துார்: திருப்புத்துார் நாகராஜன் நகர் பகுதியில் இரட்டை மின் கம்பங்கள் இருப்பதால் குறுகிய தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.இங்கு முன்பு ரோட்டில் மின் கம்பங்கள் இருந்ததால் அதை மாற்றி ரோட்டோரம் நட குடியிருப்பு வாசிகள் கோரியிருந்தனர்.பின்னர் புதிய உயரமான மின் கம்பங்கள் ரோட்டோரத்தில் மின் துறையினர் நிறுவினர். அப்பகுதியில் மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் பழைய மின்கம்பங்களிலிருந்து புதிய மின்கம்பத்தில் இணைப்பை மாற்றாமல் 2 கம்பங்களையும் பயன் படுத்தி வருகின்றனர். இதனால் குறுகிய தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. பழைய மின்கம்பத்திலிருந்து, புதிய மின்கம்பத்திற்கு இணைப்பை மாற்றி பழைய கம்பத்தை அகற்ற அப்பகுதியினர் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை