உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மைசூரு - காரைக்குடி ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

மைசூரு - காரைக்குடி ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

காரைக்குடி: மைசூரு - - காரைக்குடி சிறப்பு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ததற்கு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மைசூரு காரைக்குடிக்கு 2 நாள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காரைக்குடி வரை இயக்கப்பட்ட இந்த ரயிலானது தற்போது செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.செப்.4 மற்றும் 7 ஆகிய நாட்கள் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மறுநாள் காலை 11:05க்கும் செங்கோட்டைக்கு மாலை 4:50க்கு சென்றடையும்.இந்த ரயில், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை செல்லும்.செங்கோட்டை வரை ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு தொழில் வணிகக் கழகத்தினர் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்