உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உறவினரிடம் ரூ.2 லட்சம் அபகரிப்பு: மூவர் கைது

உறவினரிடம் ரூ.2 லட்சம் அபகரிப்பு: மூவர் கைது

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்துாரில் உறவினரிடம் நாடகமாடி பணத்தை அபகரித்த திருநங்கை உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆணைவாரியைச் சேர்ந்தவர் மாணிக்கம் 70. இவரது வீட்டிற்கு உறவினரான திருமயம் கோவிந்தப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா 53, வந்துள்ளார். மாணிக்கம் தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ.2 லட்சம் கொடுக்க செல்வதாக தெரிவித்தார். அதை கேட்ட கருப்பையா பணத்தை தான் கொண்டு சென்று கொடுப்பதாக தெரிவித்தார். அதை நம்பி மாணிக்கம் பணத்தை கருப்பையாவிடம் கொடுத்தார்.பிறகு பள்ளத்துார் கல்லுாரி சாலையில் கருப்பையா பைக்கில் சென்ற போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் பணத்தை பறித்துச் சென்றதாக மாணிக்கத்திடம் தெரிவித்தார். இதுகுறித்து மாணிக்கம் பள்ளத்துார் போலீசில் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில், கருப்பையா காரைக்குடி ஓ. சிறுவயலைச் சேர்ந்த சேவுகன் மகன் அருண்குமார், அருண்குமாரின் மனைவி திருநங்கையான கல்லாந்துறையைச் சேர்ந்த மகா 30, ஆகியோருடன் சேர்ந்து பணத்தை அபகரிக்க திட்டமிட்டது தெரிந்தது. அம்மூவரையும் போலீசார் கைது செய்து பணம் மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை