உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பி.எஸ்.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சத்தை வழிப்பறி செய்த அந்நிறுவன ஊழியர் உள்ளிட்ட 2 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.காளையார்கோவில் கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள இந்நிதி நிறுவனத்தில் விருதுநகர் சம்பகுளம் மாரிமுத்து மகன் பழனி முருகன் 30, ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பாலுசாமி மகன் கண்ணன் 24, பணிபுரிகின்றனர். இவர்கள் ஜூலை 18 மதியம் 3:50 மணிக்கு நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 8 லட்சத்து 89 ஆயிரத்து 730 ஐ காளையார்கோவிலில் உள்ள வங்கி ஒன்றில் செலுத்த டூவீலரில் சென்றனர். டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத மூவர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். நிதி நிறுவன ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் சிவகங்கை கீழவாணியங்குடியைச் சேர்ந்த குட்ட மணி என்ற மணிவண்ணன் 23, நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சிவகங்கை எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்த பாலாஜி 23, ஆகியோரை கைது செய்தனர். வழிப்பறியில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ