உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்களை பதம்பார்க்கும் சீமைக்கருவேல மரங்கள்

கண்களை பதம்பார்க்கும் சீமைக்கருவேல மரங்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்த்து வருகின்றன.இத்தாலுகாவில் கோழிக்குடிப்பட்டி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் வளர்ந்துள்ளன. இவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற தாமதமாகி விடுகிறது. டூ-வீலரில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகன வெளிச்சத்தின் காரணமாக பலருக்கும் கண்களில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேலமரங்களை சாலைப்பணியாளர்கள் மற்றும் வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை