உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தக்கை பூண்டு செடிகளை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்

தக்கை பூண்டு செடிகளை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார கிராம பகுதிகளில் நெல், சோளம், காய்கறி, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு கடந்த சில வருடங்களாக பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்தியதால் விவசாய நிலங்களில் மண்ணின் இயற்கை தன்மை குறைந்து பயிர்களின் வளர்ச்சியும் பாதித்தது.அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் மண்ணை வளப்படுத்தும் வகையில் செயற்கை உரங்களுக்கு மாற்றாக தற்போது மீண்டும் இயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளான கட்டிக்குளம் மிளகனுார், பீசர்பட்டினம், கால்பிரவு உள்ளிட்ட கிராம பகுதிகளில் இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தற்போது வயல்களில் தக்கை பூண்டு செடிகளை வளர்த்து வருகின்றனர்.2 மாதங்களில் நன்கு வளர்ந்த நிலையில் தக்கை பூண்டு செடிகளை உழுது அதே நிலத்தில் உரமாக பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு தேவையான இயற்கை சத்துக்கள் அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் தற்போது தக்கை பூண்டு செடிகளை அதிகளவில் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ