உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விதை நெல் வாங்க விவசாயிகள் ஆர்வம் மானாமதுரையில் சாகுபடி பணி துவக்கம்

விதை நெல் வாங்க விவசாயிகள் ஆர்வம் மானாமதுரையில் சாகுபடி பணி துவக்கம்

மானாமதுரை: மானாமதுரையில் விதை நெல்மூடைகளை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் போட்டி, போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர்.மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நல்ல மழை பெய்தது. நீர் நிலைகளில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளது.மேலும் வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கிராம பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து கிணறு மூலம் நெல் விவசாயம் செய்யும் விவசாயிகளும் உழவுப் பணிகளை துவக்கி உள்ளனர்.வரும் மாதங்களில் பருவமழையும் ஆரம்பிக்க உள்ள நிலையில் விவசாயிகள் தற்போது தங்களது விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் மூடைகளை மானாமதுரை வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். தற்போது வரை 50 டன்னுக்கும் மேற்பட்ட விதை நெல் விவசாயிகளுக்கு வினியோகம் செய்துள்ளனர். 50 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகிறது.வேளாண் அதிகாரி ரவிசங்கர் கூறியதாவது: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் ஆர்வமுடன் விதை நெல் வாங்கி செல்கின்றனர். விவசாயிகளுக்கு நேரடியாக பற்றாக்குறை இல்லாமல் விதை நெல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை