உள்ளூர் செய்திகள்

பூச்சொரிதல் விழா

திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு ஹிந்து வர்த்தக சங்கத்தின் சார்பில் பூத்தட்டு எடுத்து அம்மன் வழிபாடு செய்வர். நேற்று மாலை சங்க அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் தலைவர் சுரேஷ்ராமன், புதிய தலைவர்கள் இளையராஜா, செயலாளர் ஜெயங்கொண்டான், பொருளாளர் பாஸ்கர் மற்றும் ஹிந்து சங்க உறுப்பினர்கள் சரவணன், அழகு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆதிதிருத்தளிநாதர் கோயிலில் இருந்து பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக வீதிகளின் வழியாக பூமாயி அம்மன் கோயில் வந்தடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த பூமாயி அம்மன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை