உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நீதிமன்றத்தில்  பொது மருத்துவ முகாம் 

சிவகங்கை நீதிமன்றத்தில்  பொது மருத்துவ முகாம் 

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் மருத்துவ முகாமை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் துவக்கி வைத்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், விரைவு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, சாண்டில்யன், ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மாஜிஸ்திரேட்கள் அனிதா கிறிஸ்டி, பி.செல்வம், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆப்ரின்பேகம், அரசு வழக்கறிஞர் சிவக்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி, பொருளாளர் வால்மீகி நாதன், சட்டப்பணி பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் பாலசந்தர் பங்கேற்றனர். சமூக மருத்துவத்துறை தலைவர் அருண்குமார் யோகராஜ் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை