உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம்  

அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம்  

சிவகங்கை: சிவகங்கையில் அரசு ஊழியர் சங்க 41 வது ஆண்டு அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் மாரி, துணை தலைவர் வினோத்ராஜா, இணை செயலாளர் சின்னப்பன், கிருஷ்ணகுமார், பயாஸ் அகமது, ஆதிதிராவிடர் நலத்துறை சங்க மாநில தலைவர் நவநீதன், நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயலாளர் முத்தையா, பொருளாளர் சதுரகிரி, கிளை செயலாளர் முருகன், பாணம்டி, நடராஜன் பங்கேற்றனர்.தமிழக அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சங்க கொடி ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ