உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சமாதானத்திற்காக குஜராத் சாமியார் வருகை

சமாதானத்திற்காக குஜராத் சாமியார் வருகை

திருப்புவனம், : குஜராத்தைச் சேர்ந்த நிர்வாண சாமியார் ஒருவர் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கோயில்களில் தரிசனம் செய்வதுடன் இந்துத்துவம், சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்தி வலம் வந்தார். குஜராத்தில் ஆசிரமம் அமைத்துள்ள 40 வயது மதிக்கதக்க ஆண் சாமியார் புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம் சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்திற்கு வருகை தந்தார். குஜராத்தில் இருந்து காரிலேயே தமிழகம் வந்த அவர் மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் தரிசனம் செய்து வருகிறார். பொதுமக்களிடம் சமாதானமும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். உலகம் முழுவதும் ஹிந்துத்துவம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என யாத்திரையாக கிளம்பி வந்ததாக கூறும் இவர் தினமும் இரவில் பழங்கள் மட்டுமே சாப்பிடுகிறார். பக்தர்கள் கேட்டு கொண்டால் காரை விட்டு இறங்கி ஆசிர்வாதம் அளிக்கிறார். தன்னுடைய பெயர், வயது எதையும் தெரிவிக்க மறுக்கும் இவர் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தரிசனம் செய்த பின் குஜராத்தில் உள்ள தன்னுடைய ஆசிரமத்தில் தண்ணீரில் அமர்ந்து யோகாசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்தம், புனிதமண் எடுத்து செல்லும் இவர் குஜராத்தில் உள்ள தன்னுடைய ஆசிரமத்தில் இதனை வைத்து பூஜை செய்யபோவதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ