உள்ளூர் செய்திகள்

குருபூஜை விழா

திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் பாடல் பாடிய ஸ்தலம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம்ஆகும். இங்கு நால்வர் சன்னதியில் சுந்தரருக்கு குருபூஜை விழா வேலப்பர் தேசிகர் திருக்கூட்டத்தினர் சார்பில் நடந்தது.மதியம் 12 :00 மணிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் விழா தொடங்கியது.மாலை 5:45 மணிக்கு உற்சவர் திரு வீதி உலாவும்,ஆறரை மணிக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு குறித்து மதுரை முத்துராமலிங்கம் பக்திசொற்பொழிவாற்றினார். திருப்பூவண புராணத்தின் வரலாறு குறித்த நுாலை ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் வெளியிட்டார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ