| ADDED : ஜூலை 27, 2024 06:21 AM
சிவகங்கை, ஜூலை 27-சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இ.எஸ்.ஏ.எப்., நிதி நிறுவன வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் 2020 முதல் 2024 பிப்., வரை மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் குணசெல்வம் மகன் மணிகண்டன் மேலாளராக இருந்தார். மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கி வந்துள்ளனர். வங்கி மண்டல மேலாளர் ஸ்டாலின் ஜோஸ் என்பவர், வங்கியில் ஆய்வு நடத்திய போது, மேலாளராக இருந்த மணிகண்டன், வங்கியில் இருந்து ரூ.85.16 லட்சத்தை கையாடல் செய்ததை கண்டறிந்தார். இது குறித்து வங்கி உதவி மேலாளர் முனீஸ்வரன், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்டமாக ரூ.80 ஆயிரம் மட்டுமே வழங்கிய, மணிகண்டன் கையாடல் செய்த தொகையில் ரூ.84.36 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மன்னவன், வங்கி கிளை மேலாளர் மணிகண்டன் மீது வழக்கு பதிந்துள்ளார். //