உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயம் செழிக்க புரவி எடுப்பு விழா

விவசாயம் செழிக்க புரவி எடுப்பு விழா

காரைக்குடி : கிராமங்களின் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனாரின் வாகனமாக குதிரைகள் உள்ளன. இந்த குதிரைகளுக்கு, மரியாதை செய்திடவும், நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். காரைக்குடி ஊரவயல் பாலகுரு மகா சாஸ்தா அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நேற்று நடந்தது. முன்னதாக மண் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து புரவி பொட்டலில் புரவிகளுக்கு வழிபாடு தீபாராதனை நடந்தது. நேற்று காலை, குதிரை பொட்டலில் 48 குதிரை மற்றும் காளை, பாம்பு, கன்றுக்குட்டி உட்பட சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கிராம மக்கள் புரவிகளை 2 கி.மீ., துாக்கிச் சென்று அய்யனார் கோயிலில் செலுத்தினர். சாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி