உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி

பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்லுாரி கனவு என்ற தலைப்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மே.13 அன்று காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லுாரியில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பிளஸ் 2 முடித்து அடுத்து என்ன படிக்கலாம். மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் படிப்பு எவை, வருங்காலத்தை வளப்படுத்த எந்த பாடப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம். பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகள் குறித்த தகவல்கள். போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள். கல்வி கடன் குறித்த தகவல்களை வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற பள்ளிக் கல்வித்துறை கேட்டுகொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை