உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒருங்கிணைந்த கோர்ட் மானாமதுரையில் திறப்பு

ஒருங்கிணைந்த கோர்ட் மானாமதுரையில் திறப்பு

மானாமதுரை: மானாமதுரையில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு திறப்பு விழா நடைபெற்றது. மானாமதுரை சிவகங்கை ரோட்டில் கோர்ட் வளாகத்தின் பின்புறம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்டும் பணி நிறைவு பெற்றது. நேற்று மாலை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி மகாதேவன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்புரை யாற்றினார்.நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் சுரேஷ்குமார், சரவணகுமார், ஆதிகேசவலு, ஜெகதீஷ்சந்திரா,வடமலை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன், கலெக்டர் ஆஷா அஜித், எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், எம்.எல்.ஏ., தமிழரசி, மானாமதுரை தாசில்தார் ராஜா, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மானாமதுரை வக்கீல்கள் சங்கத் தலைவர் பாலமுருகன்,செயலாளர் கதிரவன் தலைமையில் வக்கீல்கள்,நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ